கனடாவில் பாரியளவு நிதி மோசடியில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நோர்த் யோர்க் பகுதியைச் சேர்ந்த 75 வயதான பெண் ஒருவரிடமிருந்து ஒரு மில்லியன் டொலர்கள் மோசடி செய்யப்பட்டுள்ளது.
றொரன்டோவின் யோங் மற்றும் செப்பர்ட் வீதிளுக்கு அருகாமையில் அமைந்துள்ள தமது வீட்டை புனரமைப்பதற்காக கட்டுமான ஒப்பந்தக்காரர் ஒருவரிடம் பொறுப்பினை ஒப்படைத்துள்ளார்.
குறித்த ஒப்பந்தக்காரர் பெண்ணிடமிருந்து ஒரு மில்லியன் டொலர் வரையில் மோசடி செய்துள்ளார்.
இதேவிதமாக பலரிடம் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு ஏமாற்றப்பட்டவர்களில் குறிப்பிடத்தக்களவானவர்கள் வயோதிபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் 54 வயதான அன்டானியோ சினோபோலி, 45 வயதான வெயன் மெக்னில், 27 வயதான பிரான்சிஸ்கோ சினோபோலி ஆகிய றொரன்டோ பிரஜைகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.