Reading Time: < 1 minute
கனடாவில் முதல்முறையாக இரட்டை கை மாற்று அறுவை சிகிச்சை செய்ய, ஒன்றாரியோ மருத்துவர்கள் தீர்மானித்துள்ளனர்.
2015ஆம் ஆண்டில் பாக்டீரியா மூளைக்காய்ச்சலால் தனது இரு கைகளையும் இழந்த ரிக் தாம்சன் என்பவருக்கே இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது.
இது மருத்துவ மற்றும் உளவியல் சோதனைகளையும், நன்கொடையாளரைக் கண்டுபிடிப்பதையும் உள்ளடக்கியது.
இந்த அறுவை சிகிச்சை, ஒகஸ்ட் அல்லது செப்டம்பர் மாத ஆரம்பத்தில் மேற்கொள்ளப்படலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
திட்டமிட்டபடி அறுவை சிகிச்சை நடந்தால், தாம்சன் கனடாவின் முதல் இரட்டை கை மாற்று அறுவை சிகிச்சை பெற்ற நோயாளியாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.