Reading Time: < 1 minute

உலக முட்டாள்கள் தினமான ஏப்ரல் மாதம் 1ம் திகதி கனடிய பழங்குடியின பெண் ஒருவர் லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்றுள்ளார்.

இந்த பெண் , கனடாவின் பெரும் சர்ச்சைக்குரிய வதிவிடப் பாடசாலையொன்றில் கற்று உயிர் பிழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பெண் ஒரு மில்லியன் டொலர் பரிசுத் தொகையை வென்றுள்ளார். டெல்மா ப்லோரன்ஸ் என்ற பெண்ணே இவ்வாறு லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்றெடுத்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 1ம் திகதி லொட்டோ லொத்தர் சீட்டிலுப்பில் இந்தப் பெண் பரிசு வென்றுள்ளார்.

பரிசு வெற்றி குறித்த அறிவித்த போது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அதனை முட்டாள்கள் தின நகைச்சுவையாகவே கருதினர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு மிகவும் பிடித்தமான பச்சை நிறத்தில் கார் ஒன்றை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளதாக இந்தப் பெண் தெரிவிக்கின்றார்.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த பெண்ணே இவ்வாறு பரிசு வென்றெடுத்துள்ளார்.