கனடாவில் மீண்டும் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் காலங்களில் பணவீக்கம் அதிகரிக்கும் என பொருளியல் ஆய்வாளர்கள் எதிர்ப்பு கூறியுள்ளனர்.
கடந்த ஜுலை மாதம் பணவீக்கம் அதிகரித்திருந்தது.
கனடாவின் வருடாந்த பணவீக்க வீதம் கடந்த ஜூன் மாதத்தில் பாரிய அளவில் வீழ்ச்சியை பதிவு செய்திருந்தது.
குறிப்பாக 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் பின்னர் பதிவான குறைந்த பணவீக்க வீதம் கடந்த ஜூன் மாதம் பதிவாகி இருந்தது.
ஜூன் மாதத்தின் பண வீக்க வீதம் 2.8 வீதமாக காணப்பட்டது. எனினும் கடந்த மாதத்தில் இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டு பணம் வைக்க வீதம் 3.1 வீதமாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக நாட்டில் பெட்ரோலின் விலை அதிகரிப்பு காரணமாக இவ்வாறு பணவீக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுவாக பொருட்களின் விலைகள் அதிகரித்துச் செல்லும் போக்கினை எதிர்வரும் காலங்களில் அவதானிக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டில் பணம் வீக்க வீதத்தை இரண்டு வீதத்தில் பேணுவதற்கு மத்திய வங்கி முயற்சி செய்து வருகின்ற நிலையில் தற்போது மீண்டும் பணவீக்கம் அதிகரித்துச் செல்லும் போக்கு பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.