கனடாவின் அனேக பகுதிகளில் மீண்டும் பெட்ரோலின் விலை அதிகரித்து செல்லும் போக்கினை அவதானிக்க முடிகின்றது.
Thanksgiving நீண்ட வார இறுதி நாட்களில் பெட்ரோலின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எரிபொருள் உற்பத்தியை மட்டுப்படுத்த எடுத்துள்ள தீர்மானம் கனடாவின் பெட்ரோல் விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி அடைய தொடங்கியது இதன் காரணமாக எரிபொருள் உற்பத்தியை மட்டுப்படுத்துவதற்கு ஒபேக் நாடுகள் தீர்மானித்துள்ளனஃ
கோடைகாலத்தில் மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 100 டாலர்களாக காணப்பட்டது கடந்த செப்டம்பர் மாதம் இந்த தொகை 84 டாலர்களாக வீழ்ச்சி அடைந்தது.
இந்த விலை வீழ்ச்சியை கருத்தில் கொண்டு ஒபெக் (OPEC) எனும் எரிபொருள் ஏற்றுமதி செய்யும் நாடுகள் தங்களது உற்பத்தியை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளன.
எரிபொருள் உற்பத்தி மட்டுப்படுத்தப்பட்டதன் தாக்கம் வட அமெரிக்க எரிபொருள் பயனாளிகளை பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கனடாவின் அனேக பகுதிகளில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை அதிகரிப்பினை பதிவு செய்துள்ளது.
ஒன்றாரியோ மாகாணத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை சராசரியாக 152 சதங்களாக விற்கப்படும் அதேவேளை பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 220 சதங்களாக விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.