Reading Time: < 1 minute

கனடாவில் மின்னல் தாக்குதலுக்கு இலக்கான ஹெலிகாப்டரில் பயணித்தவர்கள் தங்களுடைய இறுதி நிமிடங்களை எட்டியதாக கருதி உறவினர்களுக்கு அழைப்பெடுத்துள்ளனர்.

கனடாவில் பயணிகள் ஹெலிகாப்டர் ஒன்று இந்த விபத்தை எதிர்நோக்கியுள்ளது.

வான்கூவாரிற்கும் விக்டோரியாவிற்கும் இடையில் அடிக்கடி பயணம் செய்யும் இந்த ஹெலிகாப்டர் திடீரென மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி அதன் அனைத்து இலத்திரனியல் கருவிகளும் செயலிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

உயரே பறந்த ஹெலிகாப்டர் சுற்றுச்சுழன்று கீழே விழ தொடங்கியதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

நிச்சயமாக இது தமது வாழ்க்கையின் இறுதி தருணம் என கருதிய பயணிகள் ஓலமிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் சில பயணிகள் தங்களுடைய வாழ்க்கைத் துணைகளுக்கு அழைப்பு எடுத்து பிரியாவிடை பெற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் சில பயணிகள் அருகில் இருந்தவர்களின் கைகளை இறுகப்பற்றி கண்ணீர் மல்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு விமானிகள் மற்றும் 12 பயணிகளுடன் இந்த ஹெலிகாப்டர் பயணம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

திடீரென ஏற்பட்ட மின்னல் தாக்குதல் காரணமாக ஹெலிகாப்டர் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4200 அடி உயரத்திலிருந்து கீழே விழ தொடங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

மேக மூட்டத்தில் இருந்து கீழே இறங்கிய போது விமானிகளின் அபார ஆற்றல் காரணமாக விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.

Sikorsky S-76 ரக ஹெலிகாப்டர் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இலத்திரனியல் சாதனங்கள் அனைத்தும் செயலிழந்த போதிலும் விமானத்தின் ஹைட்ராலிக் தொழில்நுட்பத்தின் ஊடாக விமானிகள் மிக நேர்த்தியாக ஹெலிகாப்டரை தரையிறக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விமானத்தில் பயணம் செய்த இரண்டு விமானிகளும் 12 பயணிகளும் எவ்வித ஆபத்தும் இன்றி தரையிறங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

வாழ்க்கையின் இறுதி தருணத்தை கடப்பதாக உணர்ந்த இந்த விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் மரணத்தின் எல்லைக்கு சென்று திரும்பியவர்கள், தற்பொழுது ஒருவருக்கு ஒருவர் நட்பு பாராட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மின்னல் தாக்கம் பற்றி அறிவிக்கப்படவில்லை என விமான சேவை நிறுவனம் கூறும் அதேவேளை, இது குறித்து அறிவிக்கப்பட்டதாக கனடிய சுற்றாடல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.