கனடாவில் குடியிருப்புகளின் விற்பனையானது 2001 ஆம் ஆண்டிற்கு பின்னர் மிக மோசமான கட்டத்தில் இருப்பதாக நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதாவது 80 களின் பிற்பகுதி மற்றும் 90 களின் முற்பகுதியில் இருந்து இந்த ஆண்டு மிக மோசமான நிலை காணப்படுவதாக குறிப்பிடுகின்றனர். குடியிருப்புகளின் விற்பனையில் சுமார் 20% அளவுக்கு சரிவடைந்துள்ள நிலையில் 2023 தொடக்கத்தில், அதன் மோசமான நிலையை எட்டும் என கணிக்கின்றனர்.
2023ல் பெரும்பாலான அட்லாண்டிக் மாகாணங்கள், ஒன்ராறியோ மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா ஆகிய பகுதிகளில் மிக மோசமான வருடாந்திர சராசரி விலை சரிவு எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நவம்பர் மாதத்தில் தேசிய சராசரி வீட்டு விலை $632,802 என இருந்தது, இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் பதிவான விலையில் இருந்து 12% சரிவடைந்துள்ளது.
நவம்பர் மாதத்தில் மட்டும் கனடாவில் மொத்தமாக 30,135 குடியிருப்புகளே விற்பனையாகியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 39% சரிவு என ஆய்வாளர்கள் தரப்பு சுட்டிக்காட்டுகின்றனர்.