கனடாவின் வீதியொன்றில் சிறிய ரக விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தின் மார்க்கம் பகுதியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
றொரன்டோவின் பட்டன்வெல் மாநகரசபை விமான நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள 16ம் தெரு வீதியில் விமானம் விபத்துக்கு உள்ளானது என யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விமானம் ஓடு தளத்தில் தரையிறக்கப்பட்ட போது கட்டுப்பாட்டை இழந்து 90 பாகை மறுபுறம் திரும்பி அருகாமையில் இருந்த வீதியில் தரையிறக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
விமானம் வீதியில் தரையிறங்கிய போது அருகாமையில் வாகனங்கள் பயணம் செய்து கொண்டிருந்ததாகவும் அதிர்ஸ்டவசமாக வாகனங்களில் மோதுண்டு பாரிய விபத்து எதுவும் நிகழவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்து குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.