ரொறன்ரோ விமான நிலையத்தில் தரையிறங்கிய பாகிஸ்தான் விமான சேவை நிறுவனத்தின் ஊழியர் மாயமான நிலையில், தற்போது அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் ரொறன்ரோ விமான நிலையத்தில் தரையிறங்கிய பாகிஸ்தான் சர்வதேச விமான சேவை நிறுவனத்தின் ஊழியரையே அந்த நிறுவனம் பணியில் இருந்து வெளியேற்றியுள்ளது.
குறித்த இஜாஸ் ஷா என்ற நபர் அக்டோபர் 14ம் திகதி ரொறன்ரோ விமான நிலையத்தில் தரையிறங்கிய PIA விமானத்தில் பணியாற்றியுள்ளார். ஆனால் விமானம் தரையிறங்கிய பின்னர் அவர் மாயமாகியுள்ளார்.
அவர் மாயாமன சம்பவம், இரண்டு நாட்களுக்கு பின்னர் அவர் பணிக்கு திரும்பாத நிலையிலேயே கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில், இஜாஸ் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் வெளிவராததை அடுத்து, அவரை பணியில் இருந்து நீக்குவதாக PIA நிர்வாகம் அறிவித்துள்ளது.
மட்டுமின்றி கனடாவில் உரிய அதிகாரிகளிடம் இந்த விவகாரம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் PIA நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.