வடக்கு ஒன்ராறியோவில் இரண்டு பேருடன் கடந்த மாதம் மாயமான சிறிய விமானத்தின் சிதைவுகள் லேக் சுப்பீரியர் மாகாண பூங்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஒன்ராறியோ பிராந்திய பொலிசார் தெரிவிக்கையில், மாயமான விமானம் தொடர்பில் தங்களின் ஹெலிகொப்டர் ஒன்றும், பொதுமக்கள் பயன்படுத்தும் ஹெலிகொப்டர் ஒன்றும் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாகவும், அந்த வேளையில் குறித்த சிதைவுகள் பார்வையில் பட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், அந்த விமானத்தில் பயணம் செய்த இருவரது சடலங்களும் (John Fehr மற்றும் Brian Slingerland) மீட்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவர்களின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஆல்பர்ட்டா பகுதியில் வசிக்கும் இருவரது குடும்பத்தினருக்கும் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விமானமானது ஏப்ரல் 14ம் திகதி ஒன்ராறியோவின் டெல்லி நகரிலிருந்து மராத்தான் பகுதிக்கு சென்றதாகவும் ரெட் ராக் ஏரிக்கு அருகில் ரேடாரில் இருந்து காணாமல் போனதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.