Reading Time: < 1 minute

பிரிட்டிஷ் கொலம்பியாவின் Coquitlam பகுதியில் இருந்து மாயமான 22 வயது இளம்பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அவரது குடும்பத்தினரை மொத்தமாக உலுக்கியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் வியாழக்கிழமை உறுதி செய்துள்ளதுடன், மாயமான Zailey Smith என்பவர் தான் சடலமாக மீட்கப்பட்டவர் என்பதையும் தெரிவித்துள்ளனர்.

22 வயதான Zailey Smith மாயமானதாக கூறி, பொதுமக்களின் உதவியை நாடிய 12 மணி நேரத்தில் அவரது சடலம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. அவர் எவ்வாறு இறந்தார் என்பது தொடர்பில் இதுவரை மேலதிக தகவல் எதையும் பொலிசார் வெளியிடவில்லை.

மேலும், விசாரணைக்கு பின்னர் உரிய தகவல் வெளியிடப்படும் என்றே பொலிசார் தற்போது தெரிவித்துள்ளனர். வெளியான தகவல் தங்களை மிகவும் நொறுக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ள Zailey Smith-ன் தாயார், ஆனால் மகள் தொடர்பில் உதவ முன்வந்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.