கனடாவில் மாணவனை கத்தியால் குத்திய மூன்று மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கனடாவின் ஸ்காப்ரோவின் டன்பேர்ர்த் மற்றும் பிரிச்மவுன்பார்க் வீதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள பிரிச்மவுன்ட்பார்க் கல்லூரியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தரம் 12ல் கல்வி கற்று வரும் 17 வயதான மாணவன் ஒருவனே இவ்வாறு கத்தி குத்துக்கு இலக்காகியுள்ளான்.
படுகாமயடைந்த நிலையில் குறித்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாடசாலை முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலைகளில் இடம்பெற்று வரும் வன்முறைகள் குறித்து விரிவாக கலந்துரையாட வேண்டியிருப்பதாக றொரன்டோ மேயர் ஜோன் டோரி தெரிவித்திருந்தார்.
இந்த சம்பவத்துடன் தொடர்படைய சந்தேகத்தின் பேரில் 14 வயதுடைய இருவரும் 17 வயதுடைய ஒருவரும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.