கனடாவில் சில இடங்களில் மளிகைப் பொருட்களின் விலை அதிகமாகவும் சில இடங்களில் மளிகைப் பொருட்கள் குறைவாகவும் காணப்படுகின்றன.
வசிக்கும் பிரதேசத்தின் அடிப்படையில் மளிகைப் பொருட்களின் விலைகளில் மாற்றம் பதிவாவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாகாணம், நகரம் என்பனவற்றின் அடிப்படையில் விலைகளில் மாற்றம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பட்டர், முட்டை, கோழி இறைச்சி, மாட்டிறைச்சி, அரிசி, எப்பள் மற்றும் தக்காலி ஆகிய பொருட்கள் பல்வேறு இடங்களில் கொள்வனவு செய்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட போது மிகவும் குறைந்தளவு விலைகளைக் கொண்ட இடமாக கல்கரி பதிவாகியுள்ளது.
இந்தப் பகுதியில் சராசரி விலையானது 58.87 டொலர்களாக பதிவாகியுள்ளது.
கோழி இறைச்சி ஒரு கிலோ கிராமின் விலை 13 டொலர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, றெஜினாவில் மிகவும் விலை உயர்வாக காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
றெஜினாவில் இதே பொருட்களை கொண்ட கூடையின் விலையானது 74.17 டொலர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
வான்கூவாரில் கோழி இறைச்சியின் விலை 26 டொலர்கள் என பதிவாகியுள்ளது.