Reading Time: < 1 minute

கனடாவில் சத்திர சிகிச்சை நிபுணர் என்ற போர்வையில் சிகிச்சை வழங்கிய நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

29 வயதான ரொறன்ரோவைச் சேர்ந்த நபர் ஒருவரை இவ்வாறு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தாம் ஒரு சத்திர சிகிச்சை மருத்துவர் எனக் கூறி நான்கு பெண்களுக்கு அழகு சாதன சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார்.

இந்த நான்கு பெண்களுக்கும் உடல் பாகங்களில் மாற்றங்களை செய்யும் நோக்கில் சிகிச்சை அளிப்பதாக குறித்த நபர் கூறியுள்ளார்.

அதற்காக குறித்த நபர் ஊசி மருந்தையும் இவர்கள் நால்வருக்கும் ஏற்றியுள்ளார்.

எனினும் குறித்த நபரின் சிகிச்சை முறையில் பெண்களுக்கு ஏற்பட்ட சந்தேகம் காரணமாக இது குறித்து விசாரித்த போது குறித்த நபர் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு தகுதியுடையவர் அல்ல என்பது தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த நபரை பொலிஸார் கைது செய்து வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இவ்வாறான சம்பவங்களில் சிக்கியவர்கள் இருந்தால் அது குறித்து அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.