Reading Time: < 1 minute

கனடாவில் மண்சட்டி பயன்பாடு குறித்து எச்சரிக்க விடுக்கப்பட்டுள்ளது.

மட்பாண்டங்களில் சமைத்து உண்பது ஆரோக்கியமானது என நாம் கேள்விபட்டிருக்கின்றோம்.

எனினும், கனடாவில் விற்பனை செய்யப்படும் ஒரு வகை மண் சட்டி உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரோரா குக் வெயார்ஸ் (Arora cookwares) நிறுவனத்தின் மட் பாண்டங்கள் பற்றி இவ்வாறு எச்சரிக்கை அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கனடாவின் சுகாதார திணைக்களம் இது பற்றிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இந்த வகை சட்டிகள் அடுப்பில் வைத்ததன் பின்னர் வெப்பமடைந்து வெடிக்கக் கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் விற்பனை செய்யப்பட்ட மண் சட்டிகளில் இந்த அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சட்டிகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு கனடாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தையிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்ட இந்த மட்பாண்டங்கள் பயன்படுத்துவதனை தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.