Reading Time: < 1 minute

கனடாவில் எட்மண்டன் பகுதியில் கவநாக் போல்வார்டு என்ற இடத்தில் கூடியிருந்த மக்களை நோக்கி இனந்தெரியாத நபரொருவர் துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளார்.

இச்சம்பவத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே காயமடைந்து விழுந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தகவலறிந்து தென்மேற்கு பிரிவின் ரோந்து பொலிஸார் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்றுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்து கிடந்த 3 ஆண்களை மீட்ட நிலையில் அவர்களில் 49 மற்றும் 57 வயதுடைய 2 பேர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏறக்குறைய 50 பேர் கூடியிருந்தபோது, இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது. அவர்களில் பலர் தெற்காசிய வீடு கட்டுமான சமூகத்தில் உறுப்பினர்கள் ஆவர்.

இதனைத் தொடர்ந்து, எட்மண்டன் நகர முன்னாள் கவுன்சிலராக இருந்த மற்றும் எட்மண்டன் காவல் பணியின் முன்னாள் அதிகாரியான மொகிந்தர் பங்கா சம்பவ பகுதிக்கு சென்று பார்வையிட்டார்.

அவர்களில் ஒருவர் இந்திய வம்சாவளியான பூட்டா சிங் கில் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர், கில் பில்ட் ஹோம்ஸ் என்ற பெயரிலான கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார்.

2 பேரின் பிரேத பரிசோதனை இன்று அல்லது நாளை நடைபெறும் என போலீசார் தெரிவித்தனர். இதுபற்றி எட்மண்டன் நகர பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.