கனடாவின் ஒட்டோவா பகுதியில் பெண் ஒருவர் தனது மகனை காப்பாற்றுவதற்காக தீப்பற்றி எரிந்த வீட்டுக்குள் புகுந்து மகனை மீட்க முயற்சித்துள்ளார்.
43 வயதான ஸ்டெப்னி மெக்டோவ் என்ற பெண்ணே இவ்வாறு தனது மகனை காப்பாற்றுவதற்காக வீட்டுக்குள் புகுந்து தீக்காயங்களுக்கு உள்ளாகி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
11 வயதான மகனை தீ விபத்திலிருந்து காப்பாற்றும் நோக்கில் இவ்வாறு துணிச்சலாக வீட்டுக்குள் புகுந்துள்ளார்.
எவ்வாறெனினும் தீ விபத்து காரணமாக இருவரும் அறைக்குள் சிக்கிக் கொண்டிருந்த நிலையில் தீயணைப்பு படை வீரர்கள் தாயையும் மகனையும் மீட்டுள்ளனர்.
தீ பற்றி கொண்டிருந்த நிலையில் உயிர் ஆபத்தை கருத்தில் கொள்ளாது, இந்தப் பெண் வீட்டுக்குள் புகுந்து மகனை காப்பாற்ற முயற்சித்துள்ளார்.
இந்த விபத்தில் குறித்த சிறுவனும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.