Reading Time: < 1 minute

கனடாவில் போலி நாணயக் குற்றிகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனடாவில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட போலி நாணயக் குற்றிகள் புழக்கத்தில் விடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

எழுமாறான அடிப்படையில் நாணயக் குற்றிகள் சோதனையிடப்பட்ட போது அவை போலியானவை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

கனேடிய பொலிஸார் இந்த விசாரணைகளை நடாத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடாவில் புழக்கத்தில் உள்ள இரண்டு டொலர் நாணயக் குற்றியே இவ்வாறு போலியாக தயாரிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும், இவ்வாறு புழக்கத்தில் விடப்பட்ட நாணயக் குற்றிகளை கண்டறிந்து அவற்றை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கனேடிய பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நாணயக் குற்றியில் கரடியொன்றின் படம் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் அதனைக் கொண்டு போலி மற்றும் அசல் நாணயக் குற்றிகளை அடையாளம் காண முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு போலி நாணயக் குற்றிகள் தயாரித்து புழக்கத்தில் விட்ட குற்றச்சாட்டின் பேரில் ரிச்மன்ட் ஹில் பகுதியைச் சேர்ந்த 68 வயதான நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்து பிணையில் விடுவித்துள்ளனர்.