கனடாவில் போலி காசோலை பயன்பாட்டு மோசடிகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒன்றாறியோ மாகாணத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் போலிக்காசோலை மோசடியில் சிக்கி 38 ஆயிரம் டாலர்களை இழந்துள்ளார்.
உரிய நேரத்தில் வங்கிக்கு இது குறித்து அறிவிக்காத காரணத்தினால் அவர் இவ்வாறு பணத்தை இழந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குயான் மெஷின் ஒர்க்ஸ் என்னும் நிறுவனத்தின் உரிமையாளர் ஜோன் என்பவரே இவ்வாறு பணத்தை இழந்துள்ளார்.
தனது ஒரு காசோலையை பிரதி செய்து எட்டு போலி காசோலைகளை ஒருவர் உருவாக்கி மொபைல் பேங்கிங் செயலி ஊடாக அவற்றை வவப்பிலிட்ட்டுளு;ளதாக தெரிவித்துள்ளார்.
சுமார் 60 ஆயிரத்து 800 டாலர்கள் பைபிளிடப்பட்டு காசு ஆக்கப்பட்டுள்ளது.
உரிய நேரத்தில் இதுகுறித்து அறிவிக்கப்பட்ட காரணத்தினால் இரண்டு காசோலைகளுக்கான கொடுப்பனவு மீள பெற்றுக் கொள்ள முடிந்தது எனவும் ஏனைய ஆறு காசோலைகளுக்கு அவ்வாறு பணத்தை மீள பெற்றுக் கொள்ள முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
காலம் கடந்து அறிவித்த காரணத்தினால் தாம் 38,300 டாலர்களை இலக்க நேரிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
காசோலை ஒன்று தொடர்பில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் 48 மணித்தியாலங்களுக்குள் வங்கிக்கு அறிவிக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
வங்கி கூற்று அறிக்கையை பார்வையிட்டபோது காசோலைகள் மோசடி செய்யப்பட்டுள்ளமை கண்டறிந்து கொண்டதாக ஜோன் தெரிவிக்கின்றார்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஜோனின் வங்கி தெரிவித்துள்ளது.
காசோலைகளை மிக அவதானமாக பாவிக்குமாறும் பாதுகாப்பான இடத்தில் அவற்றை வைக்குமாறும் வங்கி அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.