கனடாவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு மூன்று மில்லியன் டொலர் நட்டஈடு வழங்கப்பட உள்ளது.
கனடாவின் மொன்ட்ரியல் நகரம் இந்த நட்டஈட்டுத் தொகையை வழங்க உள்ளது. நூற்றுக் கணக்கான போராட்டக்காரர்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நகர பொலிஸார், போராட்டக்காரர்களின் உரிமைகளை மீறும் வகையில் செயற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஆறு போராட்டக்காரர்களை கனேடிய பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் அடிப்படை உரிமைகளை பொலிஸார் மீறிச் செயற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையில் இடம்பெற்ற போராட்டங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போராட்த்தில் ஈடுபட்டவர்களின் உரிமைகளை பொலிஸார் மீறியுள்ளதாக நகர நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது.
நகர நிர்வாகத்தினர் மற்றும் பொலிஸாரின் ஒரு சில நடவடிக்கைகள் பொருத்தமானதல்ல என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.