Reading Time: < 1 minute

கனடாவில் போதை மாத்திரை உற்பத்தி செய்த குற்றச்சாட்டின் பேரில் மருத்துவர் ஒருவர் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாரிய அளவில் இந்த போதை மாத்திரை உற்பத்தி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

றெரான்ரோவைச் சேர்ந்த சேர்ந்த 31 வயதான மருத்துவர் ஒருவரையும் மேலும் 11 பேரையும் ஹமில்டன் போலீசார் கைது செய்துள்ளனர்.

மிகவும் ஆபத்தான போதை மாத்திரைகளில் ஒன்றான பென்டானயில் என்னும் மருந்தை குறித்த கும்பல் உற்பத்தி செய்து விநியோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் மிகவும் ரகசியமாக இரண்டு ஆண்டுகள் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

போதை மாத்திரை உற்பத்தி செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட கருவிகள் ரசாயன வகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து பெரும் தொகை பணம் மற்றும் பொருட்களையும் மீட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து மீட்கப்பட்ட போதை மாத்திரைகளின் சந்தை பெறுமதி சுமார் 4 மில்லியன் டாலர்கள் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக 48 குற்றவியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் 19 வயது முதல் 59 வயது வரையிலான 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.