Reading Time: < 1 minute

கனடாவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

ரொறன்ரோ பொலிஸ் சேவையைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவருக்கு இவ்வாறு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தமை போலி அறிக்கை தயாரித்தமை மற்றும் உயிரிழந்தவர்களின் உடமைகளை களவாடியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்த உத்தியோகத்தர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணைகளின் போது இந்த குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து கான்ஸ்டபிள் போரிஸ் பொரிஸோ என்ற உத்தியோகத்தனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.