Reading Time: < 1 minute

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பெண் ஒருவரை இவ்வாறு இரண்டு உத்தியோகத்தர்கள் துஷ்பிரயோகம் செய்தனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வான்கூவார் தீவுகள் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடமை நேரத்தில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாலியல் குற்றச் செயலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

43 வயதான மெத்திவ் போல் மற்றும் 40 வயதான ரயன் ஜோன்ஸ்டன் ஆகியோர் இவ்வாறு குற்றச் செயலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த இருவருக்கு எதிராகவும் பாலியல் குற்றச் செயல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும், சந்தேக நபர்கள் இருவரும் அண்மையில் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பாலியல் குற்றச் செயல் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.