Reading Time: < 1 minute
கனடாவில் பொலிஸாரின் செயற்பாடுகள் குறித்து கரிசனை வெளியிடப்பட்டுள்ளது.
பொலிஸார் அதிகளவில் துப்பாக்கிச் சூடுகளை மேற்கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு முதல் இதுவரையில் இடம்பெற்ற பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் 25 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலப் பகுதியில் கனடாவில் பொலிஸாரினால் மொத்தமாக 87 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இதில் 46 மரணங்கள் சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தில் இந்த ஆண்டில் 23 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.