கனடாவில் கல்வி கற்கச் சென்றிருந்த இந்திய இளைஞர் ஒருவர், மாரடைப்பால் மரணமடைந்ததாக கிடைத்த செய்தியால் அவரது குடும்பத்தினர் மீளாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்திலுள்ள Tanda என்னுமிடத்தைச் சேர்ந்தவர் Raja Sukhwinder Singh Kotla. இவரது மகனான Maharaja Amritpal Singh (22), கனடாவில் கல்வி கற்பதற்காக சென்றிருந்தார்.
மொன்றியலில் தங்கியிருந்த சிங், படிப்பை முடித்துவிட்டு, பைலட் பயிற்சி பெறும் திட்டத்துடன் அதற்கான முயற்சிகளிலும் இறங்கியிருந்த நிலையில், அவர் மாரடைப்பால் மரணமடைந்ததாக கனடாவிலிருக்கும் அவரது உறவினரான Charanjit Singh என்பவர், இந்தியாவிலிருக்கும் சிங் குடும்பத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த சிங் குடும்பத்தினர், அவரது மரணச் செய்தி கேட்டு கடும் அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்ந்துள்ளனர்.
சிங்குடைய உடலை இந்தியாவுக்குக் கொண்டு வர உதவுமாறு அவரது குடும்பத்தினர் இந்திய அரசைக் கோரியுள்ளனர். கட்சி ஒன்றில் முக்கியப் பொறுப்பிலிருக்கும் Sukhwinder Singh Kotlaவுக்கு, சிங் ஒரே மகன் என்பது குறிப்பிடத்தக்கது.