Reading Time: < 1 minute

கனடாவில் பாரிய தங்க கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய தமிழர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

35 வயதான பிரசாத் பரமலிங்கம் என்ற நபர் இவ்வாறு தலைமறைவாகியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

ரொறன்ரோவின் பியர்சன் விமான நிலையத்தில் சுமார் 22.5 மில்லியன் டொலர்கள் பெறுமதியான தங்கம் காணாமல் போயிருந்தது.

இந்த தங்க கடத்தல் சம்பவத்துடன் சிலர் தொடர்பு பட்டிருப்பதாக குற்றம் சுமத்தி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த கொள்ளை சம்பவம் விமான நிலையத்தில் இடம் பெற்றிருந்தது.

இந்த கொள்ளை சம்பவம் குறித்த வழக்கு விசாரணைகளில் பிரசாத் பராமலிங்கம் முன்னிலையாக தவறியதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மே மாதம் முதல் பிரசாத் பராமலிங்கத்தை தாம் பார்க்கவில்லை என அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறிய காரணத்தினால் பிரசாத் பரமலிங்கத்திற்கு கனடிய நீதிமன்றம் திறந்த பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு பேருக்கும் நீதிமன்றம் பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளது.