Reading Time: < 1 minute

கனடாவில் கனடாவின் மார்க்கம் பகுதியில் பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பலம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வீட்டிலிருந்த பெண் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்காண காணொளி வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கிதாரி பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்ததாகவும் பின்னர் அந்தப் பெண் வீட்டை நோக்கி நடந்த போது பின்னால் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் பெண்ணுக்கு உயிராபத்து ஏற்படுத்தும் காயங்கள் கிடையாது என தெரிவிக்கப்படுகின்றது.