கனடாவில் பெண்களை தகாத தொழிலில் ஈடுபடுத்திய பணம் சம்பாதித்த இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கனடாவில் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக இந்த இருவருக்கும் எதிராக பீல் பிராந்திய பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இரண்டு வெவ்வேறு ஆட்கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்பய்பட்டுள்ளனர்.
றொரன்டோ பெரும்பாக பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரையில் தகாத தொழிலாளியாக கடமையாற்றும் பெண் ஒருவரை றொரன்டோவைச் சேர்ந்த நபர் கடத்தியுள்ளார்.
குறித்த பெண்ணை தகாத தொழிலில் ஈடுபடுத்தில் அதில் ஈட்டப்படும் வருமானத்தை குறித்த நபர் எடுத்துக் கொண்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
44 வயதான லீமர் நிக்லோசன் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சில ஆண்டுகளாக குறித்த பெண்ணை கட்டுப்படுத்தி அவரை தொழிலில் ஈடுபடுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, மிஸ்ஸிசாகுவா பிரதேசத்திலும் சட்டவிரோத ஆட்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரு பெண்ணை தகாத தொழிலில் ஈடுபடுத்தி பணம் சம்பாதித்துள்ளதாகவும் அந்தப் பெண் பாலியல் தொழிலாளியின் வாழ்க்கையை கட்டுப்படுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
33 வயதான எடோர் போர்ஸ்விகுட் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பெண்ணை கட்டுப்படுத்தியதுடன் தனது விருப்ப வெறுப்புக்களுக்கு ஏற்ற வகையில் அந்தப் பெண்ணை கட்டுப்படுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.