Reading Time: < 1 minute
கனடாவில் பிறந்த குழந்தை ஒன்று உள்ளிட்ட மூன்று உயிர்களைக் காவு கொண்ட விபத்துச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் தென் கிழக்கு பகுதியான காஸ்ட்லிகருக்கு வடக்கே அமைந்துள்ள அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
என்ன காரணத்தினால் இந்த விபத்து இடம்பெற்றது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
ஒரே காரில் பயணித்த மூன்று பேர் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் 26 வயது ஆண், 25 வயது பெண் மற்றும் எட்டு நாட்களேயான சிசுவொன்றும் கொல்லப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திலேயே குறித்த மூன்று பேரும் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் சிக்கிய பிக்கப்ரக வாகனத்திற்கு சேதங்கள் ஏற்படவில்லை எனவும், சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.