கனடாவில் 40 வயதான சீக்கிய பெண் ஒருவர் பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் உள்ள தனது வீட்டில் பலமுறை கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்துள்ளதாக ரோயல் கனடியன் மவுண்டட் பொலிஸ் (RCMP) தெரிவித்துள்ளது.
புதன்கிழமை இரவு 9.30 மணிக்கு முன்னதாக 12700-பிளாக் 66 அவென்யூவில் உள்ள ஒரு வீட்டில் ஹர்ப்ரீத் கவுர் உயிருக்கு ஆபத்தான கத்திக்குத்து காயங்களால் அவதிப்படுவதைக் கண்டதாக காவல்துறை கூறியுள்ளது.
கவுரின் கணவர் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார். எனினும் பின்னர் விடுவிக்கப்பட்டார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸார், “வழக்கை முடிவுக்குகொண்டுவர புலனாய்வாளர்கள் 24 மணி நேரமும் உழைத்து வருகின்றனர்.
இந்த சம்பவங்கள் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மீது மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்திலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று பொலிஸர் கூறியுள்ளனர்.
இது குடும்ப வன்முறையாக இருக்கலாம். எந்த நேரத்திலும் குடும்ப வன்முறை குற்றச்சாட்டு எழுந்தால், பொலிசார் அதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள். கவுரின் அடையாளத்தை வெளியிடுகிறோம், இது அவர்களின் விசாரணைக்கு உதவும் என்று பொலிசார் தெரிவித்தனர்.
இதேவேளை, டிசம்பர் 3 ஆம் திகதி மிசிசாகாவில் உள்ள எரிவாயு நிலையத்திற்கு வெளியே மற்றொரு கனேடிய-சீக்கியப் பெண்ணான 21 வயதான பவன்ப்ரீத் கவுர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் இடம்பெற்று இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த மாதம், 18 வயதான சீக்கிய இளம்பெண் மெஹக்ப்ரீத் சேத்தி, சர்ரேயில் உள்ள உயர்நிலைப் பள்ளியின் வாகன நிறுத்துமிடத்தில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.