கனடாவில் பாரிய வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படக்கூடிய அபாயம் உருவாகியுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை தொழிற்சங்கம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிக்க உள்ளதாக எச்சரித்துள்ளது.
மத்திய பொதுத்துறை சேவை தொழிற்சங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளது. தமது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் எதிர்வரும் புதன்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க நேரிடும் என அறிவித்துள்ளது.
கனடிய வருமான முகவர் நிறுவனத்தின் 35000 பணியாளர்கள் உள்ளிட்ட 155000 பணியாளர்கள் இவ்வாறு போராட்டத்தில் குதிக்க உள்ளதாக எச்சரித்துள்ளனர்.
பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிடும் அளவிற்கு முன்னேற்றம் பதிவாகவில்லை என தொழிற்சங்கத்தின் தேசிய தலைவர் கிறிஸ் அயில்வர்ட் தெரிவித்துள்ளார்.
தொழில் உடன்படிக்கை உள்ளிட்ட சில கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.