கனடாவின் ஹமில்டன் பகுதியில் பாரிய வாகன மோசடியில் ஈடுபட்ட கார் விற்பனைப் பிரதிநிதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சொகுசு வாகனங்களை விற்பனை செய்யும் போர்வையில் மோசடிகள் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒன்றாரியோ லண்டனைச் சேர்ந்த 44 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் இவருக்கு எதிராக 14 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 1.5 மில்லியன் டாலர்கள் வரையில் நட்டம்
இந்த விற்பனை பிரதிநிதி சொகுசு வாகனங்கள் 14 மோசடியான முறையில் விநியோகஸ்தர்களிடமிருந்து பெற்றுக் கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் இவ்வாறு வாகனங்கள் மோசடியான முறையில் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
வேறும் நபர்களின் பெயரில் போலியான முறையில் அவர்களுக்கே தெரியாத நிலையில் வங்கி கடன் பெற்றுக் கொண்டு வாகனங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வாறு போலியான ஆவணங்களை பயன்படுத்தி கடன் பெற்றுக்கொண்டு வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டதனால் சுமார் 1.5 மில்லியன் டாலர்கள் வரையில் நட்டம் ஏற்பட்டதாக வாகன நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு மோசடியாக பெற்றுக் கொண்ட வாகனங்களில் பல ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏனைய வாகனங்கள் மீள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.