Reading Time: < 1 minute

கனடாவின் கியூபேக் மாகாணத்தில் வரி அறவீட்டுத் தொகைகள் பாரியளவில் குறைக்கப்பட்டுள்ளன.

புதிய வரவு செலவுத் திட்டத்தில் இவ்வாறு வரிகள் குறைக்கப்பட்டுள்ளன.

கியூபெக் மாகாண நிதி அமைச்சர் எரிக் கிர்ராட் மாகாணசபையில் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்திருந்தார்.

அரச வருமானங்களை அதிகரிக்கும் அதேவேளை, வரிகளை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கியூபெக் மாகாணத்தின் சாதாரண பொதுமக்களுக்கு இந்த வரிக் குறைப்பு உதவியாக அமையும் எனவும் அர்களினால் பலநூறு டொலர்களை சேமித்துக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

கியூபெக்கில் வரிகள் குறைக்கப்படுவதனால் ஐந்து ஆண்டுகளில் 9.2 பில்லியன் டொலர் வருமானம் இழக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வாறெனினும் எதிர்க்கட்சிகள் இந்த வரிக் குறைப்பு நடவடிக்கைகளை எதிர்த்து விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றன.