Reading Time: < 1 minute
கனடாவில் பாடசாலை ஒன்றின் மீது தாக்குதல் நடத்துவதாக எச்சரிக்கை விடுத்த இளைஞரின் வீட்டில் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
யோக் பிராந்தியத்தில் பள்ளிக்கூடம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்துவதாக அச்சுறுத்தல் விடுத்த இளைஞர் ஒருவரின் வீட்டிலிருந்து இவ்வாறு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
யோக் பிராந்திய பொலிஸார் இந்த ஆயுதங்களை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த இளைஞர் சிலரிடம் வாய்மொழி மூலம் பள்ளிக்கூடம் மீது தாக்குதல் நடத்துவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சந்தேக நபர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகள் நடத்திய போது அவரது வீட்டில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த மாணவர் பள்ளிக்கூடத்தில் இருந்து இடைநிறுத்தப்பட்டவர் என தெரிவிக்கப்படுகிறது.