கனடாவில் பாடசாலை மீது தாக்குதல் நடாத்தப் போவதாக மிரட்டிய சிறுவன் ஒருவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பீல் பிராந்திய பொலிஸார் குறித்த சிறுவனை கைது செய்துள்ளனர்.
புனித ஆகஸ்டின் கத்தோலிக்க இரண்டாம் நிலைப் பள்ளி மீது இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவில் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என்பதுடன் அதிகாலை 3.50 மணியளவில் சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொலை மற்றும் தாக்குதல் மேற்கொள்வதாக வாய் வழியாக அச்சுறுத்தல் விடுத்ததாக சிறுவன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சிறுவனிடமிருந்து இரண்டு வாயு துப்பாக்கிகள் அதற்கான ரவைகள் உள்ளிட்ட பொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கனடாவின் சிறுவர் பாதுகாப்பு சட்டங்களின் காரணமாக சிறுவனின் ஆள் அடையாள விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இந்த சம்பவத்தினால் பாடசாலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.