Reading Time: < 1 minute
கனடாவில் மாணவன் ஒருவன் தான் கற்கும் பாடசாலைக்கு விளையாட்டுத் துப்பாக்கி ஒன்றை கொண்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பாடசாலையின் அதிபர் பெற்றோருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
மாணவன் துப்பாக்கி கொண்டு சென்ற போதிலும் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் மிகவும் பாரதூரமான ஓர் சம்பவம் எனவும் இது குறித்து தீவிர கவனம் செலுத்தப்படும் எனவும் அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Lanor Junior Middle School என்னும் பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.