கனடாவில் இடம்பெற்ற சாலை விபத்தில் ஐந்து இந்திய மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கனடாவின் வட அமெரிக்காவின் ஒன்டாரியோ மாகாணத்தில் கடந்த 12ம் திகதி விடியற்காலையில் இந்திய மாணவர்கள் பலர் வேனில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த லாரி மீது வேன் மோதியது. இதில் இந்திய மாணவர்கள் ஹர்பிரீத் சிங், ஜஸ்பிந்தர் சிங், கரன்பால் சிங், மோகித் சவுகான் மற்றும் பவன் குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அவர்கள் 25 வயதுக்கும் குறைவானவர்கள். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று வெளியிட்ட இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கனடாவில் நடந்த சாலை விபத்தில் 5 இந்திய மாணவர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த கவலை அளிக்கிறது. கனடாவில் உள்ள இந்திய தூதரகம் அவர்களது குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும்.