Reading Time: < 1 minute

கனடாவில் ரொறன்ரோ பிராந்தியத்தில் சிரேஸ்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு பதவி குறைப்பு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ரொறன்ரோ பொலிஸ் சேவையின் முதலாவது கறுப்பின பெண் மேற்பார்வை அதிகாரி ஸ்டாஸி கிளார்க் என்பவரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு பொலிஸ் சேவையில் நடைபெற்ற பதவி உயர்வு குறித்த பரீட்சையில் மோசடிகள் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மோசடிகளுக்கு குறித்த பெண் பொலிஸ் உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தொழில் முறை ஒழுக்க விதிகளை மீறியதாக ஸ்டாஸி கிளார்க் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதன் காரணமாக அவருக்கு பதவி குறைப்பு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் பொலிஸ் மேற்பார்வை அதிகாரியாக கடமையாற்றிய கிளார்க் தற்பொழுது பரிசோதகர் தரத்திற்கு பதவி குறைக்கப்பட்டுள்ளார்.

வழமையான படிமுறைகளை பின்பற்றி குறித்த அதிகாரி பதவி உயர்வினை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.