பரிசு வென்றதாக வாடிக்கையாளர்களுக்கு பிழையான மின்னஞ்சல் அனுப்பி வைத்ததாக கனடாவின் முன்னணி நிறுவனம் ஒன்று மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிரபல உணவுப் பொருள் விற்பனை நிறுவனமான ரிம் ஹோர்டன் நிறுவனம் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சுமார் 60000 டொலர் பெறுமதியான படகு ஒன்றை பரிசாக வென்றுள்ளதாக வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் மின்னஞ்சல் அனுப்பி வைத்துள்ளது.
இந்த சம்பவம் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
போட்டியொன்றில் இவ்வாறு படகு வெல்லப்பட்டுள்ளதாக மின்னஞ்சல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மின்னஞ்சல் சட்ட ரீதியானதா என்பது குறித்து பரிசீலனை செய்த வாடிக்கையாளர்கள், பரிசு குறித்த அறிவிப்பு சரியானது என கருதியுள்ளனர்.
எனினும் இந்த மின்னஞ்சல் நிறுவனத்தினால் தவறுதலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தவறுதலாக இந்த மின்னஞ்சல் அனுப்பி வைக்கப்பட்டதாக பதில் மின்னஞ்சல் ஒன்றை நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது.