Reading Time: < 1 minute

கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தில் பரிசு அட்டை (Gift Card) வைத்திருந்த பெண் ஒருவருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

250 டாலர்கள் பெறுமதியான பரிசு அட்டை ஒன்றை குறித்த பெண் வைத்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த பரிசு அட்டை கொடுக்கல் வாங்கலுக்கு பயன்படுத்தாது வைத்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த பெண் குறித்த பரிசு அட்டையை பயன்படுத்தி கொள்வனவு செய்ய முயற்சித்த போது இந்த 250 டாலர் பெறுமதியான பரிசு அட்டையில் வெறும் 1.5 டாலர்கள் மட்டுமே எஞ்சி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த பெண் பெரும் அதிர்ச்சியை அடைந்துள்ளார். மிஸஸாகாவை சேர்ந்த கத்தரின் உச்சிடா என்ற பெண்ணே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.

தாம் செல்லாத இடங்களில் தனது பரிசு அட்டையைப் பயன்படுத்தி கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அந்தப் பெண் தெரிவிக்கின்றார்.

ஹமில்டன் மற்றும் இடோபிகாக் பகுதிகளில் இந்த பரிசு அட்டையை பயன்படுத்தி கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்த பெண் தெரிவிக்கின்றார்.

ஏதோ ஒரு வகையில் தமது பரிசு அட்டை மோசடியான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது என இந்தப் பெண் கவலை வெளியிட்டுள்ளார்.