தற்கொலையை ஆதரிக்கும் ஒரு இணைய பக்கம் கனடாவில் பரவலாக பலர் பாவிப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த இணைய பக்கமானது, சமீபத்தில் கைதான மிசிசாகா நபர் கென்னத் லா என்பவரால் தமது தொழிலுக்காக அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த கென்னத் லா மீது தற்கொலைக்கு தூண்டியவர் அல்லது உதவியர் என்பது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. பிரிட்டனில் சமீபத்தில் நடந்த பல தற்கொலைகளுக்கு குறித்த இணைய பக்கமானது தொடர்பிருப்பதாக கண்டறிந்த பின்னர் விசாரணையை எதிர்கொண்டது.
மேலும், அந்த இணைய பக்கம் அவுஸ்திரேலியா, இத்தாலி, ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனில் மட்டும் ஒரே ஒரு இணைய சேவை ஊடாக பொதுமக்கள் பாவிக்கின்றனர் என கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால் கனடாவில் எந்த கட்டுப்பாடுகளும் இன்றி அந்த இணைய பக்கம் பரவலாக பாவிக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், தற்போது கனடாவிலும் அந்த இணைய பக்கத்தை முடக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்புடைய இணைய பக்கத்தினூடே தற்கொலை எண்ணத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு கென்னத் லா சோடியம் நைட்ரைட் விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது.