கனடாவுக்கு காட்டுத்தீயை கண்டறியும் தொழில்நுட்ப உதவி மற்றும் செயற்கைக்கோள் தரவுகளை வழங்க அமெரிக்க பாதுகாப்பு துறைக்கு அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் (Joe biden) உத்தரவிட்டுள்ளார்.
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக பயங்கர காட்டுத்தீ பரவி வருகிறது.
மேலும், 458 இடங்களில் ஏற்பட்டுள்ள இந்த காட்டுத் தீயில் 235 இடங்கள் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது.
அண்டை நாடான அமெரிக்காவிலும் இது பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் காட்டு தீயை கட்டுப்படுத்துவதற்காக கனடாவுக்கு உதவ அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
இதன்படி காட்டுத்தீயை கட்டுப்படுத்த தொழில்நுட்ப உதவி மற்றும் செயற்கைக்கோள் தரவுகளை கனடாவுக்கு வழங்க அமெரிக்க பாதுகாப்பு துறைக்கு அந்த நாட்டின் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த தொழில்நுட்பம் காட்டில் ஏற்படும் புதிய தீயை கண்டறிந்து அது தொடர்பிலான முன்னறிவிப்பை வழங்கும். அதன்மூலம் காட்டுத்தீயால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க முடியும் என கூறப்படுகிறது.