கனடாவில் பனிச்சறுக்கு மற்றும் பனிமலையேறும் விளையாட்டில் ஈடுபட சென்ற மூன்று பேர் பனிப்பாறை சரிவில் சிக்குண்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
இவ்வாறு பனிப்பாறை சரிவு விபத்தில் சிக்கியவர்களில் பயண வழிகாட்டி தவிர்ந்த ஏனைய அனைவரும் வெளிநாட்டுப் பிரஜைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் இன்வெயர்மீர் பகுதியில் இந்த பனிப்பாறை சரிவு சம்பவம் பதிவாகியுள்ளது.
பனிப்பாறை சரிவில் சிக்கி காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் மிகவும் துரதிஸ்டவசமானது என நகரின் மேயர் கவலை வெளியிட்டுள்ளார்.
இந்த பருவ காலத்தில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் இதுவரையில் ஒன்பது பேர் பனிப்பாறை சரிவுகளில் சிக்குண்டு உயிரிழந்துள்ளனர். சில தசாப்தங்களில் பதிவான அதிக கூடிய மரண எண்ணிக்கை இதுவெனத் தெரிவிக்கப்படுகின்றது.