Reading Time: < 1 minute
கனடாவின் துருவ பகுதியான போர்ட் ஸ்டீவன் பகுதியில் பனிக் கரடியிடமிருந்து மனைவியை மீட்க முயற்சித்த நபர் படுகாயம் அடைந்துள்ளார்.
பனிக் கரடி திடீரென குறித்த பெண்ணை தாக்கியுள்ளது.
குறித்த பெண்ணை மீட்க முயற்சித்த போது பெண்ணின் கணவர் படுகாயம் அடைந்துள்ளார்.
இதனை அவதானித்த அயலவர் ஒருவர் பனிக்கரடியை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
கைகள் மற்றும் கால்களில் இந்த நபருக்கு கடும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிகாலை வேளையில் இந்த தாக்குதல் இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் காயமடைந்த நபருக்கு உயிர் ஆபத்து கிடையாது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.