Reading Time: < 1 minute
கனடாவில் வருடாந்த பணவீக்க வீதம் குறைவடைந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் பணவீக்கம் 5.9 வீதமாக பதிவாகியுள்ளது.
மளிகை பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ள போதிலும் பணவீக்கம் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் பணவீக்க வீதம் 6.3 வீதமாக காணப்பட்டதுடன், ஜனவரி மாதம் இந்த தொகையில் சிறிய வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இவ்வாறான ஓர் பின்னணியில் வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.