Reading Time: < 1 minute

கனடாவில் பணவீக்கம் வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்நாட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் வருடாந்த பணவீக்க வீதம் 2.7 வீதமாக பதிவாகியுள்ளது.

உணவுப் பொருட்களின் விலைகள் குறைவடைந்து செல்லும் போக்கு பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வருடாந்த அடிப்படையில் உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த ஏப்ரல் மாதத்தில் 1.4 வீதமாக குறைவடைந்துள்ளது.

எவ்வாறெனினும், எரிவாயு விலைகள் தொடர்ச்சியாக அதிகரிப்பினை பதிவு செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு போன்ற காரணிகளினால் அண்மைக் காலமாக கனடாவில் எரிபொருள் விலை அதிகரித்துச் செல்கின்ற நிலையை அவதானிக்க முடிகின்றது.

இதேவேளை, பணவீக்க வீதம் குறைவடைந்து செல்லும் நிலையில் வங்கி வட்டி வீதங்களை குறைக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.