கனடாவில் சிறிய பணத் தொகை ஒன்றை அனுப்பி வைத்து நூதனமான முறையில் துஸ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடிய வங்கிகள் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமென பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
காதல் உறவிலிருந்து பிரிந்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தொடர்புகளை துண்டித்த பின்னர் இவ்வாறு துஸ்பிரயோக சம்பவங்களில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தொலைபேசி வழியான தொடர்பாடல்கள் துண்டிக்கப்பட்டு முடக்கப்பட்டதன் பின்னர் இவ்வாறு வங்கியில் பணம் அனுப்பும் போர்வையில் துன்புறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு டொலர் அல்லது சிறு தொகை பணத்தை ஈ ட்ரான்ஸ்வர் (e-transfers) மூலம் அனுப்பி வைத்து அதனுடன் இழிவான, துன்புறுத்தக் கூடிய வாசகங்கள் அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறு தொகை பணத்தை அனுப்பி வைத்து விட்டு இவ்வாறு மேற்கொள்ளப்படும் துன்புறுத்தல்கள் குறித்து பலர் வங்கியிடமோ அல்லது பொலிஸாரிடமோ முறைப்பாடு செய்ய விரும்புவதில்லை.
வங்கிக் கணக்கிற்கு சிறு தொகை பணத்தை பரிமாற்றம் செய்து அதனுடன் மோசமான செய்திகள் அனுப்பி வைக்கும் நடைமுறை கனடா மட்டுமன்றி பல நாடுகளில் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.