Reading Time: < 1 minute

கனடாவில் பட்டர் திருட்டுச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஒன்றாரியோ மாகாணத்தின் பிரான்ட்போர்ட் பகுதியில் கடை ஒன்றிலிருந்து பட்டர், திருடி சென்ற நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

சுமார் 1200 டாலர்கள் பெறுமதியான பட்டர் இவ்வாறு இவ்வாறு திருடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் பட்டரை எடுத்தக்கொண்ட போதிலும் அதற்கு பணம் செலுத்தவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மாகாணத்தில் இவ்வாறான பாரிய அளவிலான பட்டர் திருட்டு சம்பவங்கள் பதிவாகி வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பெரும் தொகையான பட்டர் தொகையை களவாடி வெள்ளை வாகனம் ஒன்றில் ஏற்றி செல்லும் காட்சிகள் குறித்த கடையின் சீ.சீ.ரீ.வி கமராவில் பதிவாகியுள்ளது.

சந்தேக நபர் குறித்த புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

பொலிஸார் இவ்வாறான பட்டர் கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறான பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.