கனடாவில் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த சிறவனின் அலைபேசி திடீரென தீப்பற்றிக் கொண்டது.
கனடாவின் ஒன்றாறியோ மாகாணத்தின் கேம்பிரிட்ஜில் 11 வயதான சிறுவனின் பயன்படுத்திய அலைபேசியே இவ்வாறு தீப்பிடித்துக் கொண்டுள்ளது.
இந்த சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இந்த சம்பவமானது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தி இருக்கலாம் என சிறுவனின் தாய் கவலை வெளியிட்டுள்ளார்.
குறித்த சிறுவன் கையில் வைத்திருந்த அலைபேசி தவறுதலாக திரையரங்கின் ஆசன இடுக்கில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அலைபேசி தீ பற்றி கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அலைபேசியும் இருக்கையும் மட்டுமே இந்த விபத்தில் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏனென்றால் அலைபேசியின் லித்தியம் பேட்டரி தீப்பற்றிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இரசயான தாக்கம் காரணமாக இவ்வாறு குறித்த பேட்டரி தீ பற்றி கொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
அலைபேசிகளை பயன்படுத்தும் போது உரிய சார்ஜர்களை மட்டும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.