Reading Time: < 1 minute

கனடாவில் நோயாளர்கள் விபரங்கள் டிஜிட்டல் மயப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இதுவரையில் நோயாளிகள் தொடர்பிலான விபரங்கள் சரியான முறையில் பேணப்படுவதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பொதுக் கொள்கை அமைப்பு என்ற தன்னார்வ அமைப்பு இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.

எதிர்வரும் 2028ம் ஆண்டளவில் நோயாளர்கள் பற்றிய அனைத்து விபரங்களும் டிஜிட்டல் மயப்படுத்தப்பட வேண்டுமென முன்மொழியப்பட்டுள்ளது.

இவ்வாடி டிஜிட்டல் மயப்படுத்தப்படுவதன் மூலம் சிகிச்சைகளை இலகுபடுத்த முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுகாதார சேவை வழங்கும் நிறுவனர்கள் நோயாளர் விபரங்களை உரிய முறையில் பேணாமையினால் நோயாளர்கள் ஆபத்துக்களை எதிர்நோக்க நேரிடலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

டிஜிட்டல் வடிவில் தரவுகளை பேணுவதனால் எந்த இடத்திலும் விபரங்களை பெற்றுக்கொண்டு சிகிச்சை வழங்கப்பட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.